இன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா?


வாரன் பஃபெட் பங்குச்சந்தையில் பெரும் பணம் பண்ணியவர் என்பது சரி. உலகில் இருக்கும் மனிதர்களிலேயே பங்குச்சந்தையில் அதிக அளவில் பணம் செய்தவரும், தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர் பஃபெட் என்பதே உண்மை.






ஆனால், அவருக்கும் இன்ட்ரா-டே டிரேடுக்கும் வெகுதூரம். சொல்லப்போனால் ஸ்நானப்பிராப்திகூட இல்லை. (ஒரே நேரம் ஒரே குளம் அல்லது ஆற்றில் குளித்த அளவிலான சிறு தொடர்பு).






பஃபெட் செய்வதெல்லாம் இன்வெஸ்ட்மென்ட். தேர்ந்த நிதானமான முதலீடுகள். ஒரு பங்கை வாங்கியதில் இருந்து விற்கும் வரையிலான நேரத்தை வைத்து, ஒருவர் பங்குச்சந்தையில் செய்வது என்ன என்று சொல்லலாம்.







  1. நீண்டகாலம் வைத்திருப்பவர், முதலீட்டாளர். ஆங்கிலத்தில் இன்வெஸ்டர்.




  2. ஒரிரு நாள்கள் முதல் சில வாரங்கள் வரை வைத்திருந்து விற்பவர், டிரேடர்.




  3. வாங்கிய அன்றே விற்பவர், இன்ட்ரா-டே டிரேடர்.








டிரேடிங்கில், வாங்கிவிட்டு விற்பது மட்டுமல்ல. முதலில் விற்றுவிட்டு, பின்னர் அதே நாளில் விலை இறங்கியதும் வாங்கி, லாபம் பார்க்கும் நோக்கில் செய்வதும் `இன்ட்ரா-டே ' வர்த்தகம்தான். அதை`ஷார்ட்' போய்விட்டு பின்னர் `கவர்' செய்வது என்பார்கள்.






டிரேட் என்பதில் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸும் அடங்கும். அவையும் வாங்கி விற்று அல்லது விற்று வாங்கி லாபம் முயல அனுமதிப்பவை. அவற்றைத் தனியாகப் பார்க்கலாம். ஆமாம். இவையெல்லாமே முயற்சிகள்தான். இவற்றில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கலாம். நஷ்டமும் ஆகலாம்.








 






Popular posts
கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்
பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
சரியான ஆங்ரி பேபியா இருக்கே: வைரலாகும் சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசு போட்டோ
இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார்
மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
Image