தமிழ்நாடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
TN Dish Office Assitant பணிக்கான வயது வரம்பு
1.7.2019 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC,MBC/DNC பிரிவினர்கள் 32 வயதுக்குள்ளாகவும், SC,ST பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு TN Dish Office Assitant விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கொண்டு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.