தமிழ்நாடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 8 ஆம்வகுப்பு படித்திருந்தால் போதும். அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாகத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வேலைவாய்ப்பு அறிவிப்பை TN Dish Recruitment 2019 வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, விழுப்புரம், திருவள்ளூர், திருவொற்றியூர், வேலூர் என பல மாவட்டங்களில் உள்ள தொழிலக பாதுகாப்பு இயக்கத்தில் காலியிடங்கள் உள்ளது.
TN Dish Office Assitant பணிக்கான வயது வரம்பு
1.7.2019 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC,MBC/DNC பிரிவினர்கள் 32 வயதுக்குள்ளாகவும், SC,ST பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு TN Dish Office Assitant விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கொண்டு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.